பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு நேற்று (04) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் , அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.
இதன்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபரால் அனுப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் அமைச்சர்கள், சட்டம், ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதன்பின்னரே ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்காதமைக்காக ஆளும் கட்சியினரிடமிருந்து கடும் எதிர்ப்பை பொலிஸ்மா எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews

