மாலையில் மழைக்கு வாய்ப்பு!

1635812679 weather rain new 2 1

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version