tamilni 164 scaled
இலங்கைசெய்திகள்

காலநிலை தொடர்பில் அறிவிப்பு

Share

காலநிலை தொடர்பில் அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதற்கமைய மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...