இலங்கை
அடை மழை: வெள்ள அபாய எச்சரிக்கை
அடை மழை: வெள்ள அபாய எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, தொடரும் மழையினால் நில்வளா, கிங், களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயாக்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை வெள்ள அபாயமாக அதிகரிக்கவில்லை என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தொடர்ந்து மழை பெய்தால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.