காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

rtjy 75

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை நிலைமையை மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version