மக்கள் ஆணையிட்டால் ஆட்சியைக் கவிழ்ப்போம்! – அநுர

Anura Kumara Dissanayaka

‘ இந்த அரசை விரட்டுவதற்கான 2 ஆவது அலை விரைவில் ஆரம்பமாகும். அந்த அலை சாதாரண அலையாக அல்லாமல், சுனாமிபோல் இருக்கும். இலக்கை அடையாமல் ஓயமாட்டோம்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த அரசை விரட்டியடிக்க வீதியில் இறங்குவோம் என்ற தொனிப்பொருளின்கீழ் அம்பலாந்தோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

” அனைத்து கட்சி உறுப்பினர்களும் இன்று வரிசைகளில் நிற்கின்றனர். எனவே, கட்சி பேதம் வேண்டாம். நாட்டை மீட்க மக்கள் சக்தியாக ஒன்றிணைவோம்.

மக்கள், ஆம் சொன்னால் அரசை விரட்டுவதற்கான ஆட்டத்தை ஆரம்பிக்க நாம் தயார். 2 ஆவது அலை ஆரம்பமாகும். திகதி, விவரம் அறிவிக்கப்படும். அந்த அலை சுனாமிபோல அமையும்.

மக்களுக்கு நெருக்கடிவரும்போது, பொலிஸாரும், இராணுவத்தினரும் மக்கள் பக்கம்தான் நிற்பார்கள்.” – என்றார் அநுர.

#SriLankaNews

Exit mobile version