” தன்னெழுச்சியாக போராடும் இளைஞர்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றனர். மதவாதத்தை வெறுக்கின்றனர். இலங்கையர் என்ற அடையாளத்தை உருவாக்க இது சிறந்த ஆரம்பமாகும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இனவாதமும், மதவாதமும்தான் இந்நாட்டுக்கு சாபக்கேடாக இருந்தது. இவற்றை தூண்டிய பிக்குகளை மக்கள் இன்று நிராகரிக்கின்றனர். அதுமட்டுமல்ல நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராடுகின்றனர். இது சிறந்த விடயமாகும். தன்னெழுச்சியான போராட்டத்துக்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் அரசியல் தலைமைத்துவம் தேவைப்படும். அதனை நாம் வழங்குவோம்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். விருப்பு வாக்கு தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் இந்நாட்டில் அரசியல் மறுசீரமைப்பு இடம்பெறும்.” – என்றார்.
#SriLankaNews