பொருளாதாரம் வீழ்வதற்கு இடமளிக்கமாட்டோம்! – ஜோன்ஸ்டன் பதிலடி

Johnston Fernando

நாட்டின் பொருளாதாரம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, மிகவும் சிறப்பாக – திறமையுடன் நிதி அமைச்சை வழி நடத்துகின்றார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்லவால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல இரு நாட்கள் விவாதம் கோரியதுடன், நிதி அமைச்சர் தொடர்பிலும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனவரி முதலாம் திகதி நாடு வங்குரோத்தடையும், இது தொடர்பில் நேரலையில் வந்து தகவல் வெளியிடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார வல்லுனர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் சுட்டிக்காட்டினர். தூரநோக்கு சிந்தனையின்றி, தற்காலிக மகிழ்ச்சிக்காகவே அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிடுகின்றனர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

நாட்டில் பொருளாதாரம் விழுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் சிறப்பாக செயற்படுகின்றார். நிதி அமைச்சர் திறமையாக வழிநடத்துகின்றார்.” – என்றார்.

Exit mobile version