” மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் இந்த அரசு பதவியில் நீடிக்க முற்படுமானால், சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சு பதவியை துறந்தவருமான நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த அரசு பதவி விலக வேண்டும், நாட்டை நிர்வகிக்கக்கூடிய ஒருவரிடம் ஆட்சியை கையளிக்க வேண்டும். அதனைவிடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முற்பட்டால், நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்வோம். ஆட்சியை மாற்று தரப்பினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
50 இற்கு மேற்பட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ளனர். எதிரணிகளிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும்.” – என்றார்.