எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட நாமல் எம்.பி.,
“அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் கலந்துரையாடி வருகின்றார். இதற்கு முன்னைய அரசுகளும் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதாகத் தெரிவித்திருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை” – என்றார்.
#SriLankaNews
Leave a comment