ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அப்பகுதிக்கு நேற்று திடீரென வந்த குழுவொன்று கோட்டா வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தேசியக் கொடிகளை ஏந்தியவாறு, போரை வெற்றிகொண்ட கோட்டா எங்களுக்கு வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
குறிப்பிட்ட சிலரே அப்போராட்டத்தில் பங்கேற்றனர் எனவும், சிறிது நேரத்தின் பின்னர் அவர்கள் கலைந்துசென்றுவிட்டனர் எனவும் தெரியவருகின்றது.
காலி முகத்திடல் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள், அவர்களுக்கு எவ்வித இடையூறுகளையும் மேற்கொள்ளவில்லை.
#SriLankaNews