” இளைஞர்களின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும். அரசமைப்பின் அவசர மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
” எங்களின் எதிர்காலம் முடிந்துவிட்டது. தமது எதிர்காலத்துக்காகவே இளைஞர்கள் போராடுகின்றனர். அறவழியில் அவர்கள் களமிறங்கியுள்ளனர். அரசமைப்பு ரீதியில் தீர்வை கோருகின்றனர். எனவே, அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிமடுக்க வேண்டும்.
புதிய அமைச்சரவை பதவியேற்றாலும் இன்று நால்வர்தான் சபைக்கு வந்துள்ளனர். இந்நிலைமை தொடரக்கூடாது. தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.” – என்று குறிப்பிட்டார்.
#SriLankaNews