டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக தேங்கி நிற்கும் மழைநீரால் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டுச் சூழல் உட்பட நுளம்புகள் பெருகும் அனைத்து இடங்களையும், சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் தற்போது 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில், மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment