Untitled 1 58 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் – எச்சரிக்கை

Share

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

குறைப்பாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் இல்லாவிடின் அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் அரசியல் நோக்கத்துக்காகவே வழங்கப்படுகிறது என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி நலன்புரி வழங்கல் சிறந்த முறையில்

முன்னெடுக்கப்பட்டது.தற்போது எதிர்க்கட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆட்சியில் இருந்த போது சமுர்த்தி நலன்புரி செயற்திட்டத்துக்கு எதிராக செயற்படவில்லை.

குறுகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டே சமுர்த்தி நலன்புரி செயற்திட்டம் விமர்சிக்கப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் அறிமுகப்படுத்திய அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் சமூக கட்டமைப்பில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.ஏழ்மையில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே குறைப்பாடுகள் விரைவாக திருத்திக் கொள்ளப்பட வேண்டும் இல்லாவிட்டால் அது அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.
குறைப்பாடுகளுடன் இந்த நலன்புரி செயற்திட்டத்தை அமுல்படுத்த முடியாது என்றார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...