14 22
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி

Share

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என மறுத்து வந்திருப்பதுடன், அவை தொடர்பில் நம்பத் தகுந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தவறியிருக்கின்றன.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கமேனும் கடந்தகால அரசாங்கங்களின் தோல்விகளைச் சீர்செய்து, நீதியையும் பொறுப்புக் கூறலையும் நிலைநாட்டுமா என சர்வதேச மன்னிப்புச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் 16 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 16 வருடங்கள் பூர்த்தியாகும் மே 18இல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்படல் சம்பவங்கள் உள்ளடங்கலாக யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பதிவான சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான மிக மோசமான மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்னமும் நீதியையும், பொறுப்புக் கூறலையும் கோரி வருகின்றனர்.

இருப்பினும் அத்தகைய குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் மறுத்து வந்திருப்பதுடன், நம்பத் தகுந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தவறியிருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய புதிய அரசாங்கமேனும் கடந்தகால அரசாங்கங்களின் தோல்விகளைச் சீர்செய்து, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமா? அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினரின் நீதிக்கான கோரிக்கைக்குச் சர்வதேச சமூகமும் ஆதரவளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...