20 4
இலங்கைசெய்திகள்

பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி

Share

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது எதற்காகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் பொன்சேகா முன்வைத்து வருகின்றார். மகிந்த ராஜபக்ச தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இதையடுத்தே, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சரத் பொன்சேகா செயற்படுகின்றார் என்றும், அதற்காகவே அவருக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

இறுதிப் போரை முடிப்பதற்கு முன்னர், மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது எனச் சரத் பொன்சேகா கூறி வருகின்றார். இது பொய்யான அறிவிப்பாகும்.

போர் முடிவுக்கு வரப்போகின்றது என்பது தெரிந்திருந்தால், எதற்காக ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சரத் பொன்சேகா சீனாவுக்குச் சென்றார்? முடியப்போகும் போருக்கு எதற்காக ஆயுதங்கள்? போர் முடியப்போகின்றது என மகிந்தவுக்கும் தெரியாது. பொன்சேகாவுக்கும் தெரியாது.

போரின்போது பணியாற்றிய படைத் தளபதிகளில் பொன்சேகாவைத் தவிர, ஏனைய அனைவருக்கும் எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், பொன்சேகாவுக்கு எதிராக எந்தத் தரப்பாலும் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை. ஏனெனில், படையினரை ஐரோப்பிய நாடுகளிடம் காட்டிக் கொடுத்தவரே பொன்சேகாதான் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...