12 7
இலங்கைசெய்திகள்

வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் வாக்களிக்க முடியுமா: வெளியான தகவல்

Share

வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் வாக்களிக்க முடியுமா: வெளியான தகவல்

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.

நேற்றைய தினம் விசேட தினமாக அறிவிக்கப்பட்டு வாக்காளர் அட்டை விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறெனினும், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமாயின் வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவும் தபால் திணைக்களமும் இணைந்து அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைத்தாலும் கிடைக்கப்பெறாவிட்டாலும் வாக்களிப்பதற்கு அது தடையாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறும் என நாம் நம்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையம் எது என தெரிந்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் அட்டையின் மூலம் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்காளர் எண்ணை அறிந்து கொள்ள வழியமைக்கும் என்ற போதிலும் அட்டை கிடைக்கப் பெறாமை தேர்தலில் வாக்களிப்பதற்கு பாரதூரமான தடையாக அமையாது என ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...