4 44
இலங்கைசெய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

Share

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில் வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.

இதன்படி, நாளை(25) மாலை 6 மணிக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை(27) முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதிவரை வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

எதிர்க்கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தின் சிறந்த விடயங்களை வரவேற்றுள்ள நிலையில் ஒருசில விடயங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் புதிய பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன்புரி திட்டம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் மலையக அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...