நிதி கிடைத்தால் தபால் மூல வாக்களிப்பு!

election commission 10.12.2021

கோரப்பட்ட நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைத்தால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு நடைபெற வேண்டுமானால், ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் தபால் வாக்குச்சீட்டுகளை அரச அச்சகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு பின்னர் நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக செயற்படும் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version