இலங்கையர்களுக்கு விற்றமின் டி குறைபாடு

download 3 1

இலங்கையின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் டி குறைபாடுடன் காணப்படுவதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் டொக்டர் நிரஞ்சல மிகொட விதான தெரிவித்துள்ளார்.

விற்றமின் டி குறைபாட்டால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்றும் மருத்துவர் கூறினார். சூரிய ஒளி மூலம் சாதாரண மக்கள் தங்களுக்குத் தேவையான விற்றமின் டியைப் பெற முடியும் என்றும், இது மிகவும் எளிமையான வழி என்றும் நிபுணர் கூறினார்.

ஒரு சராசரி நபர் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் சூரிய ஒளியை பெறுவது முக்கியம் என்றும் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version