இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்திற்கு அருகில் கடும் பதற்றம்

Share
24 4
Share

பத்தரமுல்ல (Battaramulla) நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்ற ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது, தற்போது (18.06.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, ‘தொழில் உரிமையாகும்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

போராட்டத்தினை கட்டுபடுத்துவதற்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த போராட்டத்தில் அநேகமான இளைஞர்கள் ஈடுபட்டு தங்களின் கோரிக்கையை தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றார்கள்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...