தாவடியில் வீடொன்றுக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்

தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தும் பெறுமதியான பொருள்களை விற்பனை சேதப்படுத்தியும் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

நேற்றிரவு 8.30 மணியளவில் மின்வெட்டு வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

முதியவர்கள் மூவர் வசிக்கும் வீடு மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

IMG 20220401 WA0006

#SriLankaNews

Exit mobile version