கிராமத்திற்கு தகவல் சட்டம் – யாழில் கலந்துரையாடல்

IMG 20220928 WA0065

வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிராமத்திற்கு தகவல் சட்டம் என்னும் தொனிப்பொருளில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலை செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் தகவல் அறியும் ஆணைக்குழுவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தோடு,யாழ் மாவட்ட அரச அதிபர் க மகேசன்,யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் எஸ்.றகுராம், தகவல் அறியும் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.ரி உபாலி அபேரத்தன ,தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர்ளான ,கிசாலி பின்ரோ ஜெயவர்தன,ஜெகத் லியோன் ஆராய்ச்சி சமூக மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள் மாவட்ட பிரதேச செயலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தகவல் அறியும் சட்டம் தொடர்பாக கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

#SriLankaNews

Exit mobile version