9 17
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும்: விஜித ஹேரத்

Share

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். ஐக்கிய மக்கள் சக்தி குறைவான ஆசனங்களை பெற்றுள்ளதோடு மாத்திரமின்றி, அக்கட்சியின் மேயர் வேட்பாளர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளார். எனவே, அவர்களால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியாது என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதையே பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே அதிகளவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

48 உறுப்பினர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 29 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது மாநகர மேயர் வேட்பாளர் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் இளம் வேட்பாளருடன் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்திருக்கின்றார். தொகுதியில் மேயர் வேட்பாளர் தோல்வியடைந்துள்ள நிலையிலும், மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகக் கூறுவதற்கு வெட்கமில்லையா? அவர்கள் முயற்சித்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லை.

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். மாநகர சபை, நகரசபை அல்லது பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கும் யாருக்கும் எந்த சிறப்புரிமைகளையோ பணத்தையோ வழங்கி எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் மோசமான பழைய முறைமை எமது அரசாங்கம் ஒருபோதும் பின்பற்றாது. நாம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை பலப்படுத்துவதற்கு ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் அவர்களுடன் பொறுப்புக்களைப் பகிர்ந்துகொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தயாராக இருக்கிறோம்.”- என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...