யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

tSHr7rVMDdNiBPrUkrs0

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் அமைதியான முறையில் இன்று  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்தினை தேசிய கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் பூர்த்தி செய்த நிலையில், அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு அவர்கள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நினைவு கூர்ந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு கோரிக்கைகளை ஏந்திய பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டனர்.

“மலையக மக்கள் சுதந்திரமாக வாழ காணி வழங்கு” “மலையக மக்களை சிதைக்க வேண்டாம்”, “பதவிகளுக்கு மலையக மக்களை விற்காதே” , “மலையக மக்கள் சுதந்திரமாய் வாழ காணி கொடு” “தோட்ட வைத்தியசாலை அரசுடமையாக்கப்பட வேண்டும்” , “வியர்வை விதைத்த பூமி உழைப்பாளர்கள் உரிமையான பூமி”, போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் சர்வ மத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Exit mobile version