24 665fda953f1a3
இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

Share

சமூக ஊடகங்களில் பரவிய குழந்தை தாக்கப்படும் காணொளி: நபர்களுக்கு நேர்ந்த கதி

சமூக ஊடகங்களில் குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை நேற்று (04) ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் காவல்துறை காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் தமது கடும் விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...