திருகோணமலை – குறிஞ்சிக்கேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி பெற்று தரப்படும் என கிழக்கு ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
படகு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை, கிழக்கு ஆளுநர் கிண்ணியா வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.
அங்கு விபத்து தொடர்பில் தெரிவிக்கையில்,
விபத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது உள்ள அனைத்து பாலங்களின் தரம் மறு ஆய்வு செய்யப்படும். அதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதற்கு பொலிஸ் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியிற் பிரிவு, மற்றும் கடற்படையினரால் தலைமை தாங்கப்படும்.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் நடக்காமல் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை – என்றார்.
#SriLankaNews
Leave a comment