தையிட்டி விகாரையில் பறக்கவிடப்பட்டுள்ள வெசாக் கொடிகள்!

தையிட்டி விகாரையில் பறக்கவிடப்பட்டுள்ள வெசாக் கொடிகள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு வெசாக் கூடுகள் கட்டப்பட்டு பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டு பெளத்த பாடல்கள் போடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குறித்த ஏற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி இறுதிநாளான வெசாக் தினத்தில்  போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

தையிட்டி எமது நிலம், புத்த விகாரை வேண்டாம், இராணுவமே வெளியேறு என
போராட்டகாரர்கள் பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் இன்று மாலை முடிவுக்கு கொண்டுவருவதாக முன்னர் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டாலும் போராட்டம் சிலவேளை தொடர்ச்சியாக இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி கடந்த புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தொடரச்சியாக மூன்று நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

 

IMG 20230505 WA0099

#srilankaNews

Exit mobile version