சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்! – கார்ட்ஸ் விளையாடும் இளைஞர்கள்

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசைகளில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இன்றைய தினம் சாவகச்சேரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், வாகனங்களை வரிசையில் நிறுத்தி விட்டு இளைஞர்கள் கூட்டமாக கார்ட்ஸ் விளையாடும் படங்கள் வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2022 06 21 at 12.07.21 PM

#SriLankaNews

Exit mobile version