24 6637aa81e131d
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கான அனுமதி: அமைச்சர் தகவல்!

Share

வாகன இறக்குமதிக்கான அனுமதி: அமைச்சர் தகவல்!

வாகன இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடை, அடுத்த ஆண்டு முழுமையாக நீக்கப்படலாமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிகரிக்கும் டொலர் கையிருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதற்கான விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே அதன் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இலங்கைக்கு (Sri Lanka) வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் முறைகேடுகள் காணப்படுவதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான முறைகேடுகளை தவிர்க்கவும் வாகன இறக்குமதிக்கான தரங்களை மேம்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பிரச்சினைகளை நிவர்த்தி செய்ததன் பின்னர் டொலர் கையிருப்பு மற்றும் ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு இலங்கைக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்படலாமென நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...