இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

10 30
Share

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

இந்த வருட இறுதிக்குள் வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் சுற்றுலா மற்றும் பிற பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என அதிகாரி கூறினார்.

அடுத்த மாதமளவில் இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் லொறிகள், டிப்பர் மற்றும் பெக்ஹோ போன்ற தொழில்துறை வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க மற்றொரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் திறைசேரியின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கார்கள், வான்கள் மற்றும் ஜீப்கள் போன்ற தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரம், அடுத்த வருடத்தின் ஆரம்பித்தில் சமர்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...