அபாய வலயமாகும் வவுனியா – சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை!

COVID - இன்று மட்டும் தொற்று - 4,427

கிராம சேவகருக்கு தொற்று உறுதி!

அபாய வலயத்தை நோக்கி வவுனியா மாவட்டம் சென்றுகொண்டிருக்கிறது என சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

இதன்படி, வவுனியா நகரம், நொச்சிமோட்டை மற்றும் தோணிக்கல் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, அதிகரித்து வருகின்ற தொற்றாளர்களை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார தரப்பினரால் பல்வேறு முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்காலிக சுகாதார பணி உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிராமமட்ட அமைப்புக்களின் உதவிகளைப் பெற்று அதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்களையும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களையும் கண்காணிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version