வவுனியா மரணச்சடங்கு – 28 பேருக்கு தொற்று!

india exempts oxygen concentrator imports from customs clearance testing kits from duty

வவுனியா ஒலுமடு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற இறப்பு வீட்டில் கலந்துகொண்ட இருவர், சுகவீனமடைந்ததில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதையடுத்து சுகாதாரப் பிரிவினரால் மரணச் சடங்கில் கலந்துகொண்ட 30 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 28 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களை தனிமைப்படுத்தியதோடு ஏனையவர்களை இணம்கண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், விதிமுறைகளை மீறி நடந்து கொண்டமைக்காக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version