17
இலங்கைசெய்திகள்

வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Share

வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா(Vavuniya)-தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடித்து வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் நேற்று(30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு விண்ணப்பித்துள்ளார்.

அதன் வழக்கு விசாரணை வரவுள்ளதால் விளக்கமறியலை நீடித்து வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...