உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்பதற்காக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் வத்திக்கான் முழு ஆதரவை வழங்கும் என்று கொழும்பு பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
வத்திக்கான் இலங்கையின் செயல்முறையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அது இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை விசாரிக்க சர்வதேச தலையீடு கோரி கர்தினால் விடுத்த அழைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
#SrilankaNews
Leave a comment