21வது திருத்த சட்டத்துக்கு வாசுவும் ஆதரவு!

Vasudeva Nanayakkara

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதையும், பதவிகள் வகிப்பதையும் தடுக்கும் ஏற்பாடு கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புதிய பிரதமரை தெரிவு செய்த அணுகுமுறையை தமது கட்சி அனுமதிக்காது எனவும், அதனால்தான் அரசில் இணையவில்லை எனவும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

 

Exit mobile version