வார தொடக்கத்தில் மாற்றம் கண்ட டொலரின் பெறுமதி

4 17

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்டுள்ளது. இலங்கை உணவகம்

அதன்படி, கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகிய நிலையில் இன்று (30) ​​அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த வார இறுதியில் 295.86 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 295.83ஆக பதிவாகியுள்ளது.

வார இறுதியில் 304.18 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 304.15 ஆகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.87 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.76 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.28 ஆகவும் விற்பனைப் பெறுமதி 358.12 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 404.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 418.69 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 200.94 ஆகவும் பதிவாகியுள்ளது.

Exit mobile version