ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போதே அவர் முன்னிலையில், வஜிர எம்.பியாக உறுதியுரை ஏற்றார்.
ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்றதால் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வஜிர நியமிக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews