யாழ் மாவட்ட செயலகத்தில் பயன்தரு மரங்கள் நடுகை!

வீட்டுத்தோட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேலதிகமாக அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இதனொரு கட்டமாக யாழ். மாவட்ட செயலக விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயன்தரு மரங்கள் மாவட்ட செயலக வளாகத்தில் நாட்டப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன் , மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மரங்களை நாட்டி வைத்தனர்.

இதேவேளை கத்தரி, மிளகாய் மற்றும் தக்காளி ஆகிய மரக்கறி நாற்றுகளின் அறுவடை நிகழ்வு நேற்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20220810 145332

#SriLankaNews

Exit mobile version