VPN பயன்படுத்துங்கள்! – நாமல் ருவிட்

namal

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்சவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களை தடை செய்வது மன்னிக்க முடியாத செயல் என தெரிவித்துள்ள நாமல், VPN பயன்படுத்துவதன் மூலமாக சமூக ஊடகங்களை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், நான் VPN மூலமாகவே சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறேன். VPN செயலி இந்த தடைகளை எல்லாம் முற்றிலும் இல்லாமல் ஆக்குகிறது.

நாட்டின் அதிகாரிகள், சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் சிந்தித்து, தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version