anura
அரசியல்இலங்கைசெய்திகள்

அநுரவுடன் அமெரிக்கத் தூதுவர் திடீர் சந்திப்பு!

Share

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியுன் சங், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.

இன்று பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் அமெரிக்கத் தூதுவருடன் சந்திப்பு இடம்பெற்றது எனவும், நாட்டின் நடப்பு அரசியல் நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடி குறித்தும் இதன்போது கருத்துப் பரிமாறிக்கொள்ளப்பட்டது எனவும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

“பொருளாதார நெருக்கடிக்கு நிலையான, உள்ளடக்கிய தீர்வுகளை நோக்கி நகரும் இலங்கை அரசின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக நான் பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றேன். அந்தவகையில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்கள் குறித்து விவாதிக்க நான் அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தேன்” என்று அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
ajith111125 1
செய்திகள்இலங்கை

சென்னையில் நடிகர் அஜித்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி – மிரட்டல் விடுத்தவர் குறித்துக் காவல்துறையினர் விசாரணை!

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பாடசாலைகள், விமானங்கள்...

MediaFile 1 4
செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான ஊழல் வழக்கு: கையடக்கத் தொலைபேசி கட்டணம் மோசடி – சாட்சிப் பதிவு நிறைவு, மேலதிக விசாரணை டிசம்பர் 9க்கு ஒத்திவைப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு...

image 87489e8d1f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை முத்து நகரில் 42 நாட்களான சிசு உயிரிழப்பு: பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைப்பு – காவல்துறையினர் விசாரணை!

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர்...