இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியுன் சங், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.
இன்று பிற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் அமெரிக்கத் தூதுவருடன் சந்திப்பு இடம்பெற்றது எனவும், நாட்டின் நடப்பு அரசியல் நிலைமைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடி குறித்தும் இதன்போது கருத்துப் பரிமாறிக்கொள்ளப்பட்டது எனவும் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
“பொருளாதார நெருக்கடிக்கு நிலையான, உள்ளடக்கிய தீர்வுகளை நோக்கி நகரும் இலங்கை அரசின் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக நான் பலதரப்பட்ட அரசியல் பிரதிநிதிகளைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றேன். அந்தவகையில் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் மிக அவசரமான சவால்கள் குறித்து விவாதிக்க நான் அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தேன்” என்று அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews