மைத்திரி – அமெரிக்கத் தூதுவர் முக்கிய சந்திப்பு!

my1

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்தமையையிட்டு மகிழ்ச்சியடைந்தேன். இலங்கை மக்களின் அவல நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் வேண்டுகோள் விடுத்தமைக்குத் தூதுவருக்கு நான்
நன்றியைத் தெரிவித்தேன். இலங்கையில் அவரது பதவிக்காலம் வெற்றியடைவதற்கும் வாழ்த்துத் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கத் தூதுவரும் இந்தச் சந்திப்பு குறித்து தமது ருவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

“தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்த அவரது முன்னோக்கைக் கேட்பதற்கும், அமைதியான போராட்டத்துக்கான உரிமை உட்பட ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநிறுத்துதல் மற்றும் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிப்பதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் சந்தித்தேன்” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version