யாழ்ப்பாணம், ஊரெழுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி ஊரெழுவில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், காணாமல்போயிருந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஊரெழு கிழக்குப் பகுதியிலுள்ள பாழடைந்த அறையில் இருந்தே இவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் இணுவில் பகுதியைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான தங்கராசா உஷாந்தன் (வயது 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி, சடலம் மீதான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews