மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் கண்டி வீதியில் டிக்கிரி கொள்ளாவ பகுதியில் வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியாருக்கு சொந்தமான சொகுசு பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் கிளிநொச்சி அந்நியன் குளம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பஸ் சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews