20 27
இலங்கைசெய்திகள்

மார்ச் வரை நீடிக்கும் தேங்காய் தட்டுப்பாடு

Share

மார்ச் வரை நீடிக்கும் தேங்காய் தட்டுப்பாடு

எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் தேங்காய் விலையில் மாற்றம் இல்லை என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் வரையில் தேங்காய் விளைச்சல் கிடைக்காது என்ற காரணத்தினால் தொடர்ந்தும் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கைத்தொழில் துறைக்கும் நுகர்விக்கும் தேங்காய் விநியோகம் செய்வதில் சிரமங்கள் நிலவி வருவதாகவும் இதனால் தொடர்ந்தும் தேங்காய் விலை உயர்வடைந்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேங்காய் விளைச்சல் கிடைக்கும் வரையில் இந்த நிலைமை நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் நிலைமைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் அரசாங்கத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் விளையும் தேங்காய்களை சதொச நிறுவனம் ஊடாக நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...