பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
இவ்விரு தரப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சில் இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையிலேயே இரண்டாம் சுற்று பேச்சு இன்று இடம்பெறுகின்றது.
#SriLankaNews