பாரிய மோசடி குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்களை போன்று விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடை அணிந்து இவ்வாறான கடமைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால் எந்தவொரு சாரதியும் அடையாள அட்டையை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியாட்கள் சிலர் பொலிஸாரின் பெயரில் இலஞ்சம் பெறும் நடவடிக்கைகள் அல்லது வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பொருட்களை திருடலாம் என்பதால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
Comments are closed.