பல்கலை கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!

uni teachers

எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு கடந்த மார்ச் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

முறையற்ற வரி கொள்கை உள்ளிட்ட சில விடயங்களை வலியுறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version