பல்கலைக்கான பதிவு நாளை!

University Grants Commission UGC Sri Lanka

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தாம் தெரிவு செய்யும் கற்கை நெறி மற்றும் பல்கலைக்கழகத்திற்கு நாளை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இதை தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் நாளை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version